சேலம் வெள்ளப்பெருக்கில் கைக்குழந்தையுடன் சிக்கிக்கொண்ட தம்பதி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கைக்குழந்தையுடன் சிக்கிண்ட தம்பதி உட்பட 4 பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கடந்த சில நாட்களாக கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், திடீரென நீர்வீழ்ச்சியில் செந்நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே கைக்குழந்தையுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற தம்பதி உட்பட 4 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கி அருகிலுள்ள பாறைகளில் தஞ்சமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கயிறு கட்டி அவர்களை மீட்டனர்.
வனத்துறையினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அந்த பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வெள்ளத்தில் தவறி விழுந்த நிலையில், சிறிது நேரத்தில் அவர்கள் தண்ணீரில் நீந்தி பாறையை பிடித்து கரையேறினர்.நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் ஆணைவாரி நீர் வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி சூழல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments